நிலக்கரி அமைச்சகம்

வாயுமயமாக்கலில் சவால்களும் வாய்ப்புகளும் என்பது குறித்த “கேரிங் – 2024” இரண்டு நாள் பயிலரங்கு புதுதில்லியில் தொடங்கியது

Posted On: 27 JUN 2024 12:01PM by PIB Chennai

வாயுமயமாக்கலில் சவால்களும் வாய்ப்புகளும் என்பது குறித்த கேரிங் 2024 இரண்டு நாள் பயிலரங்கை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் - சிஐஎம்எஃப்ஆர்) இன்று புதுதில்லியில் தொடங்கியது. இதில்  தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போர் ஒருங்கிணைந்து வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தின் சிக்கல்கள் மற்றும் திறன்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

கோல் இந்தியா நிறுவனம், இந்திய எஃகு ஆணையம்,  ஜிண்டால் எஃகு மற்றும் மின்சார நிறுவனம், ஹிண்டால்கோ தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 75-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய சிஎஸ்ஐஆர் – சிஐஎம்எஃப்ஆர் இயக்குநர் டாக்டர் அர்விந்த் குமார் மிஸ்ரா, உலகளாவிய எரிசக்திக் கலவையில் நிலக்கரியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  மெத்தனால், ரசாயனங்கள், உரங்கள், திரவ எரிபொருட்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கு வாயுமயமாக்கலின் தேவையையும் அவர் எடுத்துரைத்தார்.

சிஎஸ்ஐஆர் – சிஐஎம்எஃப்ஆர்-ன் வாயுமயமாக்கல்  பிரிவின் தலைவர்  டாக்டர் பிரகாஷ் டி சவான், இந்தப் பயிலரங்கின் நோக்கங்களையும் தொழில்துறைக்கு அதன் பொருத்தப்பாட்டையும்  எடுத்துரைத்தார். நீடிக்கவல்ல எரிசக்தித் தீர்வுகளின் முன்னேற்றம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை உறுதிப்படுத்துதலுக்கு  வாயுமயமாக்கலின் முக்கியப் பங்களிப்பை அவர் வலியுறுத்தினார்.

வாயமயமாக்கல் திட்டங்களின் அமலாக்கத்தை ஊக்குவிக்க மத்திய அரசின் ரூ.8,500 கோடி ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்ட தலைமை விருந்தினரும் நிலக்கரி அமைச்சகத்தின் திட்ட ஆலோசகருமான திரு ஆனந்த்ஜி பிரசாத், இந்தியாவின் எரிசக்தி இலக்குகளை அடைவது மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை விரிவாக்குவதில் வாயுமயமாக்கலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

-----

SMB/KPG/KV



(Release ID: 2029051) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP