அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) – தேசிய இயற்பியல் ஆய்வகம் எரிசக்தி மற்றும் சாதனங்கள் குறித்த “ஒரு வாரம் ஒரு கருப்பொருள்” எரிசக்தி நிகழ்ச்சியை கொண்டாடியது

Posted On: 26 JUN 2024 8:17PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்..ஆர்), அதன் 37 ஆய்வகங்களில் எட்டு வெவ்வேறு கருப்பொருள்களில் ஒரு வார கால நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கிறது, இது சந்தைப்படுத்தக்கூடிய / மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் / தயாரிப்புகளின் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறது, "எரிசக்தி மற்றும் எரிசக்தி சாதனங்கள்" என்ற இலக்கு கருப்பொருள் புதுதில்லியில் 2024 ஜூன் 24-28 தேதிகளில் எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு வழக்கத்திற்கு குறித்த மாறான, நீடித்த மற்றும் புதுமையான அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது.

 

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் சிஎஸ்ஐஆர்) – தேசிய இயற்பியல் ஆய்வகம் 2024 ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், எரிசக்தி வாயு (ஹைட்ரஜன் & மாற்று எரிபொருட்கள்), அளவியல் மற்றும் விவசாய கழிவுகள் முதல் உயிரி நிலக்கரி வரை பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப வலிமை மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்துகிறது. வல்லுநர் செயல்முறை விளக்கக்காட்சிகள், தொழில்துறை மாநாடு, ஆய்வக வருகைகள், வேலை வசதிகள் செயல்முறை விளக்கம் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்ச்சிசிஎஸ்ஐஆர்-என்பிஎல் எரிசக்தி அடிப்படையிலான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி குறித்து மேலோட்டமாக எடுத்துரைத்தார். சி.எஸ்..ஆர்-என்.பி.எல் இயக்குநர் டாக்டர் எஸ்.ஆர்.தாதே, சூரியசக்தி, உயிரி பொருண்மை, ஹைட்ரஜன் ஆகியவற்றில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான அதன் திறனையும் வலியுறுத்தினார். துறையைச் சேர்ந்த சுமார் 40 பங்கேற்பாளர்களும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 80 மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 27 ஜூன் 2024 அன்று பசுமை ஆற்றல், எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள் பற்றிய அமர்வு நடைபெறும்.

***  

ANU/PKV/BR/KV

 


(Release ID: 2028952) Visitor Counter : 61


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP