ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவம் குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்) நடத்தியது

Posted On: 25 JUN 2024 5:54PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவ ஆய்வை உலகளாவிய தரம் மற்றும் முன்னுரிமைகளுடன் இணைப்பதற்கான முயற்சியை வலுப்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான  ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்), இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத நிறுவனமான ஸ்ரீகிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. மேலும் சிசிஆர்ஏஎஸ் தனது புதிய இணையதளத்தைத் தொடங்கியது.

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்) நடத்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் கொட்டேச்சா, இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம், நிதியை பயனுள்ள வகையில் செலவிடுவதை உறுதி செய்வதாகும் என்றார். மருந்துச்செடி ஆராய்ச்சி, தரம், பாதுகாப்பு, மருத்துவ மானுடவியல், தொன்மையான மருத்துவ குறிப்புகளை டிஜிட்டல்மயமாக்குதல், இதன் மூலம் இதற்கான உலகளாவிய ஏற்பு மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்குதல் ஆகியவையும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சகம்,  நித்தி ஆயோக், இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சி கவுன்சில்களின் தலைவர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்,  ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நிறுவனங்களின் இயக்குநர்கள், கொள்கை வகுப்போர், மருந்தக பிரதிநிதிகள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர்.

***

SRI/SMB/RS/KV

 


(Release ID: 2028750) Visitor Counter : 56