கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய நீர்வழிச்சாலை ஆணைய தலைமையகத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஆய்வு செய்தார்
Posted On:
25 JUN 2024 7:30PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்திய உள்நாட்டு நீர்வழிப் பாதை ஆணையத்தின் நொய்டா தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இந்தப் பயணத்தின்போது, நாட்டில் உள்ள 111 தேசிய நீர்வழிப் பாதைகளின் நிலை குறித்தும், சாலைகள் மற்றும் ரயில்வேக்களுக்கு உறுதுணையாக உள்நாட்டு நீர்வழிப் பாதைகள், நீடித்த போக்குவரத்து முறையாக எவ்வாறு உருவாகி வருகின்றன என்பது குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது.
இந்திய தேசிய நீர்வழிச் சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், நாடு முழுவதும் தேசிய நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், நீர்வழிகளில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாட்டில் நதி கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் கலப்பின மின்சார கட்டுமரக் கப்பல்கள் மற்றும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் கப்பல் போன்ற சமீபத்திய முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும், தேசிய நீர்வழி 1 - கங்கை நதியில் உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வழி வளர்ச்சித் திட்டத்தின் முன்னேற்றத்தை திரு சோனோவால் ஆய்வு செய்தார். வாரணாசி, சாஹிப்கஞ்ச், ஹால்டியா ஆகிய இடங்களில் பன்னோக்கு முனையங்களையும், கலுகாட்டில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கவும், இணைப்பை மேம்படுத்தவும் நீர்வழிப் போக்குவரத்து உள்கட்டமைப்பை இந்த ஆணையம் மேம்படுத்தி வருகிறது. கங்கை நதிக்கரையில் வசிக்கும் சமூகங்கள் பயனடையும் வகையில் இந்திய பன்னாட்டு நீர்ப்பாசன ஆணையம் சமுதாய படகுத்துறைகளையும் நிறுவி வருகிறது.
"வலுவான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முறையை உருவாக்க மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய 'புதிய இந்தியா' என்ற பார்வைக்கு ஏற்ப, இந்தியாவின் தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதையும், தேசத்திற்கு திறமையான, நிலையான போக்குவரத்து தேர்வுகளை உறுதி செய்வதையும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது", என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028605
***
ANU/PKV/BR/KV
(Release ID: 2028709)
Visitor Counter : 107