அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தித் திறன் 70 சதவீதம் அதிகரிக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 25 JUN 2024 6:09PM by PIB Chennai

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித் திறன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய   அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தித் துறையின் 100 நாள் செயல் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக இன்று (25.06.2024) புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்ததுடன் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து பேசிய அவர்அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

கதிரியக்க மருந்துகள் மற்றும் அணு சக்தி மருத்துவம்ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கதிரியக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்கு வழிவகுக்கும் என்றும்   டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும்அணுசக்தித் துறை செயலாளருமான டாக்டர் அஜித்குமார் மொகந்தி மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***

 

PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2028610) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Hindi_MP , English , Urdu , Marathi