மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

உயர் செயல்திறன் கொண்ட மனிதவள மேம்பாட்டுக்கான சூழல் அமைப்பை உருவாக்க சி-டாக் - ஏஐசிடிஇ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 25 JUN 2024 4:53PM by PIB Chennai

உயர் செயல்திறன் கணினி மற்றும் அதனைச் சார்ந்த பிரிவுகளில் மனிதவள மேம்பாட்டுக்கான சூழலை உருவாக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுடன்,   மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பிற அதிகாரிகள் முன்னிலையில், ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராம், சி-டாக் புனே மற்றும் கார்ப்பரேட் வியூகத்தின் நிர்வாக இயக்குநர் கர்னல் அஷீத் நாத் (ஓய்வு) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மருத்துவக் கல்லூரி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்நுட்பங்களில் கற்பித்தல் திறனை மேம்படுத்த இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். முதன்மை பயிற்சியாளர்கள் தங்கள் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க தேவையான அறிவுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

கணினி அறிவியல் அல்லாத பிற துறைகளில் உள்ள ஆசிரியர்களின் பாட நிபுணத்துவத்தை மேம்படுத்த இந்தப் பயிற்சி திட்டங்கள் நடத்தப்படும்.

கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் தளத்தில் பல்வேறு துறைகளில் இலவச ஆன்லைன் படிப்புகள் கற்போருக்கு வழங்கப்படும். இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சென்றடைய உதவும்,

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2028536

***

ANU/PKV/KV/DL


(Release ID: 2028553) Visitor Counter : 82