சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகம் முக்கியமான கனிமங்களின் நான்காவது தவணை ஏலத்தைத் தொடங்கியது
Posted On:
24 JUN 2024 7:25PM by PIB Chennai
புதுதில்லி சிஜிஓ வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய கனிம சுரங்கங்களுக்கான 4-வது தவணை ஏலத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி, இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருணாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் அமைந்துள்ள சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. குறிப்பாக கிராஃபைட், குளுகோநைட், பாஸ்போரைட், பொட்டாஷ், நிக்கல் மற்றும் அரிய தாதுக்கள் உள்ள 10 சுரங்கங்களும் இதில் அடங்கும். இது தவிர தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10 சுரங்கங்களில் கிராஃபைட், டங்ஸ்டன், வெனேடியம், கோபால்ட் மற்றும் நிக்கல் உள்ளிட்ட தாது சுரங்கங்களுக்கான ஏலமும் இன்று தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028356
***
PKV/MM/AG/DL
(Release ID: 2028369)
Visitor Counter : 84