மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பான செயல்திட்ட பயிலரங்கிற்கு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
24 JUN 2024 2:17PM by PIB Chennai
21-வது கால்நடை கணக்கெடுப்பை முன்னிட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளித்து, செயல்திட்டம் வகுப்பது தொடர்பாக, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்கு உட்பட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை முக்கியமான பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
2024 ஜூன் 25 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். துறையின் இணையமைச்சர்கள் திரு எஸ் பி சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன், துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கால்நடை கணக்கெடுப்பு, இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு முதுகெலும்பாக கருதப்படுகிறது. வீடுதோறும் எடுக்கப்படும் இந்த விரிவான கணக்கெடுப்பு, நாடு முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்கினங்கள் மற்றும் பறவைகள் பற்றிய புள்ளி விவரத்தை தயாரிக்க உதவிகரமாக இருக்கும்.
***
SMB/MM/AG/KV
(रिलीज़ आईडी: 2028254)
आगंतुक पटल : 144