சுரங்கங்கள் அமைச்சகம்
முக்கிய கனிமத் தொகுதிகளின் நான்காவது கட்ட ஏலத்தை சுரங்க அமைச்சகம் 24-ம் தேதி தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
22 JUN 2024 6:32PM by PIB Chennai
[10:32 AM, 6/23/2024] Typ Dhanalakshmi: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் 2024 ஜூன் 24 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முக்கிய கனிமத் தொகுதிகளின் 4வது கட்ட ஏலத்தைத் தொடங்க வைக்கின்றனர்.
நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் கனிமப் பாதுகாப்பில் முக்கியக் கனிமங்கள் அதிக பங்கு வகிக்கின்றன. அவற்றின் பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்கத்திற்கு ஒரு சில நாடுகளை நம்பியிருப்பது நமது விநியோகச் சங்கிலியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனை நிவர்த்தி செய்ய, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் திருத்தப்பட்டது. இதன் கீழ் 24 முக்கியமான கனிமங்கள் தொடர்பாக புதிய விதிகள் வகுக்கப்பட்டன.
இதுவரை, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 38 முக்கியத்துவம் வாய்ந்த கனிமத் தொகுதிகளை மத்திய அரசு 3 தவணையாக ஏலம் விட்டுள்ளது.
***
ANU/SRI/PLM/KV
(रिलीज़ आईडी: 2028101)
आगंतुक पटल : 95