மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விரிவான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைப்பு

Posted On: 22 JUN 2024 11:15PM by PIB Chennai

தேசிய தேர்வு முகமை, நீட் ( யுஜி)  தேர்வை கடந்த மாதம் 5ந்தேதி ஓஎம்ஆர்  (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடத்தியது. இதில் 
முறைகேடுகள் / மோசடி / ஆள்மாறாட்டம்  போன்றவை தொடர்பான சில வழக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்வு நடத்துவதில் வெளிப்படைத்தன்மை உள்ளதால், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், மறு ஆய்வுக்குப் பிறகு, விரிவான விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த விஷயத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள், அதனுடன் தொடர்புடைய அல்லது இடைநிகழ்வான விஷயங்களைத் தடுப்பதற்கும் பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.

தேர்வுகளின் புனிதத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிநபரும் / நிறுவனமும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

***

ANU/PKV/KV

(Release ID: 2028097) Visitor Counter : 36

Read this release in: English , Urdu , Punjabi