பாதுகாப்பு அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சமீர் மற்றும் இந்திய ராணுவத்தின் எம்.சி.டி.இ, இணைந்து தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான உத்திசார் கூட்டாண்மையில் ஈடுபடுகின்றன
Posted On:
22 JUN 2024 9:26PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி (எம்.சி.டி.இ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமான சமீர் ஆகியவை 'இந்திய ராணுவத்திற்கான அடுத்த தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பங்களில்' ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எம்.சி.டி.இ கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் கே.ஹெச்.கவாஸ் மற்றும் சமீர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் பி.ஹெச்.ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் கே மர்வாஹா மற்றும் மேஜர் ஜெனரல் சி எஸ் மான் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இந்த முயற்சி இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, 'இந்திய ராணுவத்திற்கான தொழில்நுட்ப பயன்பாடு ஆண்டு' என்ற ராணுவத் தளபதியின் அறிவிப்பை நோக்கி இணைக்கப்பட்டுள்ளது.
சமீர் மற்றும் எம்.சி.டி.இ இடையேயான கூட்டாண்மை, ஒரு ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது, புதிய தொழில்நுட்ப எல்லைகளை ஆராய்வதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் குறிப்பதுடன், நவீன போர்க்கள சவால்களை எதிர்கொள்கிறது. கம்பியில்லா தொழில்நுட்பங்களில் சமீரின் நிபுணத்துவத்தையும், தகவல் தொடர்பு, மின்னணு போர் மற்றும் சைபர் செயல்பாடுகளில் எம்.சி.டி.இ-யின் பயன்பாட்டு திறனையும் இணைத்து, இந்த ஒத்துழைப்பு பாதுகாப்பு மற்றும் உத்திசார் துறைகளில் கணிசமான முன்னேற்றங்களை உறுதியளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028014
***
ANU/AD/BR/KV
(Release ID: 2028094)
Visitor Counter : 80