நிதி அமைச்சகம்
53-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் முக்கியப் பரிந்துரைகள்
Posted On:
22 JUN 2024 7:43PM by PIB Chennai
53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று (22-06-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, கோவா மற்றும் மேகாலயா முதலமைச்சர்கள், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்:
* 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்ட டிமாண்ட் நோட்டீஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
* ஜிஎஸ்டி தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு செலுத்த வேண்டிய முன் வைப்புத்தொகையின் அளவைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது
* ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மூன்று மாத காலம் அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தொடங்கும் என்ற சிஜிஎஸ்டி சட்டத்தின் விதிகளை திருத்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
* வரி செலுத்துவோரின் வட்டிச் சுமையைக் குறைக்க, மின்னணு பணப் பேரேட்டில் (ECL) கிடைக்கும் தொகைக்கு, வருமான வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 50-ன் கீழ் வட்டி விதிக்க வேண்டாம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
* பால் கேன்களுக்கு (எஃகு, இரும்பு, அலுமினியம்) 12% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
*சாமானிய மக்களுக்கு ரயில்வே வழங்கும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
* விடுதி சேவைகள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான சில விலக்குகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
*அனைத்து சூரிய சமையல் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* பாதுகாப்புப் படைகளுக்கான குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான ஐஜிஎஸ்டி வரி விலக்கை 2029 ஜூன் 30 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027982
***
SRI /PLM/DL
(Release ID: 2028016)
Visitor Counter : 713