தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புச் சட்டம், 2023: தொலைத்தொடர்பு இணைப்பில் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது
Posted On:
22 JUN 2024 5:52PM by PIB Chennai
தொலைத்தொடர்புச் சட்டம் -2023-ன் பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 ஆகிய பிரிவுகளை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு நேற்று (21.06.2024) வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சட்டம்-2023 ஆனது, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாடு தொடர்பான சட்டத்தைத் திருத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் இதில் அடங்கும். தொலைத்தொடர்புச் சட்டம், 2023 பழைய சட்டக் கட்டமைப்பை ரத்து செய்கிறது.
அனைவரின் உள்ளடக்கம், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளைக் கொண்ட இந்தப் புதிய சட்டம், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்புச் சட்டம்- 2023, டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 24.12.2023 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இச்சட்டம் பெற்றது.
***
SRI /PLM/DL
(Release ID: 2028009)
Visitor Counter : 96