கலாசாரத்துறை அமைச்சகம்

சத்ரபதி சிவாஜி நமது நாட்டின் சிறந்த அடையாளமாக திகழ்வதுடன் பல நூற்றாண்டுகளாக நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறார்: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

Posted On: 22 JUN 2024 6:59PM by PIB Chennai

புதுதில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஜிசிஏ) மற்றும் தேசிய நவீன கலைக்கூடம் (என்ஜிஎம்ஏ) இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிவாஜி மகாராஜின் 115 ஓவியங்களின் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 15 நாட்களில், பல கலை ஆர்வலர்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர்.

ஓவியங்களைப் பார்வையிட்ட பின் பேசிய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், சத்ரபதி சிவாஜி மகாராஜ் நமது நாட்டின் ஒரு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறார் என்றார். பல நூற்றாண்டுகளாக நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அவர் இருந்து வருகிறார் என அமைச்சர் தெரிவித்தார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த வரலாற்றுக் கண்காட்சி, அவரது வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஓவியங்கள் ஸ்ரீகாந்த் சௌகுலே மற்றும் அவரது மகன் கௌதம் சௌகுலே ஆகியோரால் பத்ம விபூஷண் பாபாசாகேப் புரந்தரேயின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். அண்மையில், இந்த ஓவியங்களை சேகரித்த திரு தீபக் கோர், அவற்றை இந்திரா காந்தி தேசிய மையத்திடம் பாரம்பரிய சொத்தாக ஒப்படைத்தார்.

இதற்கென ஒரு நிரந்தர பார்வையாளர் மையத்தை உருவாக்கவும், இந்த கண்காட்சியை நாடு முழுவதும் உள்ள பிற இடங்களில் நடத்தவும் கலாச்சார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

***

SRI /PLM/DL



(Release ID: 2028004) Visitor Counter : 15