பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த 100 நாள் சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
21 JUN 2024 7:55PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த 100 நாள் சிறப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
2024 ஜூன் 21 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்தப் பிரச்சார இயக்கம், பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் இது குறித்த தேசியப் பயிலரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர், துறைச் செயலாளர் திரு. அனில் மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில், இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் பேசுகையில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், ஊட்டச் சத்து இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும் என்றார்.
இந்த 100 நாள் இயக்கத்தின் மூலம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பெண்களின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான தனது முயற்சிகளை மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் வலுப்படுத்துகிறது.
******
ANU/SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 2027899)
आगंतुक पटल : 144