நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2024 5:05PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் இந்தியாவின் பாரம்பரிய முறையான யோகாவை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறினார். பிரதமரின் அயராத முயற்சியால் யோகா மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027584
***
MM/RS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2027709)
வருகையாளர் எண்ணிக்கை : 56