மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நமது உடல் மற்றும் மன நலனுக்காக நம் அன்றாட வாழ்க்கையில் யோகாவை பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
Posted On:
21 JUN 2024 1:38PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கிருஷி பவனில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தமது உரையின் போது, யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, நமது உடல் மற்றும் மன நலனுக்காக நமது அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுமாறு பரிந்துரைத்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை சர்வதேச யோகா தினத்தை புதுதில்லியில் உற்சாகத்துடன் கொண்டாடியது. இந்த ஆண்டு, சர்வதேச யோகா தினம் "தனிநபர் மற்றும் சமூகத்திற்கான யோகா" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தியது, இது தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் சமூக நலனுக்கான யோகா பயிற்சிகளின் நன்மைகளை வலியுறுத்துகிறது.
மீன்வளத்துறை செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாய், மீன்வளத்துறை செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, மீன்வளத்துறை இணைச் செயலாளர் திருமதி நீது பிரசாத், பொருளாதார ஆலோசகர் திரு கௌரவ் குமார் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2027370)
PKV/AG/RR
(Release ID: 2027504)
Visitor Counter : 51