சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச யோகாதினம் 2024-ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் 550 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு யோகா நிகழ்சிக்கு ஏற்பாடு
Posted On:
20 JUN 2024 6:52PM by PIB Chennai
உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குடன் கூடிய இந்த பிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு “நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா” என்ற மையக் கருவுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ், ஒரு தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென சிறப்பு யோகா முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில், 550 மாற்றுத்திறனாளிகள், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி புதுதில்லி பாரகம்பா சாலையில் உள்ள மாதிரி பள்ளி வளாகத்தில், 2024, ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் திரு பி எல் வர்மா, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் கௌரவ விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
***
AD/MM/RS/DL
(Release ID: 2027197)
Visitor Counter : 64