பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், ஐஎன்எஸ் ராஜாளி தளத்தை பார்வையிட்டு அதன் ஆயத்த நிலையை ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 20 JUN 2024 5:15PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், தமிழ்நாட்டின் அரக்கோணம் அருகே உள்ள இந்திய கடற்படை விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளியை பார்வையிட்டு, அதன் ஆயத்த நிலையை ஆய்வு செய்தார். இந்தப் பயணத்தின் போது, இந்தத் தளத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் எதிர்கால கடல்சார் நடவடிக்கைகள், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறப்பட்டது. இந்தத் தளத்தில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்களிடம் கலந்துரையாடிய அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்  கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.

ஐஎன்எஸ் ராஜாளி தளம், 1992, மார்ச் 11 அன்று தொடங்கப்பட்டது.  தமிழக கடலோரப் பகுதிகளில் பெருமளவில் காணப்படும் கழுகு இனத்தைச் சேர்ந்த ஆக்ரோஷமான பறவையான “ராஜாளி”-யின் பெயர் இந்த நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த விமான தளம்  சென்னைக்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில்,  சுமார் 2,200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது.

 தற்போது, ஐஎன்எஸ் ராஜாளி, கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையத்தின்  கட்டுப்பாட்டில், சுமார் 4700 பணியாளர்களை கொண்ட படைப்பிரிவாகவும், நாட்டின் அதிநவீன மற்றும் மிகப் பெரிய கடற்படை விமான தளமாகவும் இயங்கி வருகிறது. நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி ஆகிய  இரு முக்கிய  பணிகளை இந்த நிலையம் மேற்கொண்டு வருகிறது.

***

AD/MM/RS/DL


(रिलीज़ आईडी: 2027196) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP