அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு புதிய நன்னீர் ஈரணு பேரினம் கண்டுபிடிப்பு

Posted On: 20 JUN 2024 3:32PM by PIB Chennai

கிழக்குத் தொடர்ச்சி மலையின் நன்னீர் ஆற்றில் காணப்படும் கோம்போன்மாய்டு ஈரணு (டையாட்டம்) புதிய பேரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வால்வு சமச்சீர் மற்றும் சில வால்வு அம்சங்களின் அடிப்படையில் கோம்போன்மாய்டு குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமிருந்து மாறுபட்ட சுவாரஸ்யமான அம்சங்களின் தொகுப்பைக் கொண்ட இந்த பேரினம், நாட்டில் அதன் கட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தை மதிப்பிடுவதற்காக இண்டிகோனிமா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மாறுபட்ட நிலப்பரப்புகளின் பல்லுயிர் பெருக்கத்தை வடிவமைப்பதில் ஈரணு பேரினத்தின் முக்கியத்துவத்தை இந்த ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

ஈரணு பேரினம் (டையாட்டம்) நுண்ணிய ஆல்காக்கள் ஆகும். அவை உலகளாவிய ஆக்ஸிஜனில் 25 சதவீதத்தை உற்பத்தி செய்வதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உத்தேசமாக ஒவ்வொரு நான்காவது சுவாச ஆக்ஸிஜனையும் நாம் உள்ளிழுக்கிறோம். அவை நீர்வாழ் உணவுச் சங்கிலியின் தளமாக செயல்படுகின்றன. எந்தவொரு நீர் வேதியியல் மாற்றங்களையும் அவற்றின் உணர்திறன் காரணமாக, அவை நீர்வாழ் ஆரோக்கியத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

எஹ்ரன்பெர்க்கின் 1845 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் அறிக்கையின் படி, டயட்டம்கள் இந்தியாவில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட நுண்ணுயிரிகள் ஆகும். அப்போதிருந்து, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில், நன்னீர் மற்றும் கடல் சூழல்களில் இருந்து டையாட்டம்கள் பதிவாகியுள்ளன. ஏறத்தாழ 6,500 டையாட்டம் டேக்ஸா இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 30 சதவீதம் இந்தியாவுக்கு சொந்தமானவை (ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே) இது இந்தியாவின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், பல்வேறு உயிர் புவியியல் மண்டலங்கள் நன்னீர் முதல் கடல் வரை, கடல் மட்டம் முதல் உயர்ந்த மலைகள் வரை மற்றும் கார ஏரிகள் முதல் அமில சதுப்பு நிலங்கள் வரை வாழ்விட பன்முகத்தன்மையுடன் பல்வேறு உயிரினங்களை ஆதரிக்கின்றன. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக்கிய தீபகற்ப இந்தியா, தனித்துவமான புவியியல், எடாஃபிக் மற்றும் பருவநிலை மாற்றங்களைக் கொண்டுள்ளது. அவை தனித்துவமான புவியியல் நிலைகளைக் கொண்ட பரந்த அளவிலான வாழ்விடங்களைப் போற்றுவதுடன், தனித்துவமான டையட்டம்களை ஆதரிக்கின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏ.ஆர்.ஐ) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இண்டிகோனிமா, பிறவற்றில் இருந்து வேறுபட்டதாக காணப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027006

***

AD/MM/RS/RR/DL



(Release ID: 2027132) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP