தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தி கமாண்டன்ட்ஸ் ஷேடோ' திரைப்படம் படுகொலைகள் குறித்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது

Posted On: 18 JUN 2024 8:15PM by PIB Chennai

சர்வதேச கூட்டுத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று 'தி கமாண்டன்ட்ஸ் ஷேடோ' படத்தின் இயக்குநர் டேனியலா வோல்கர் கூறுகிறார். 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதால், அதிக உள்ளடக்கங்கள் உள்ளன என்று  அவர் தெரிவித்தார்.

'தி கமாண்டன்ட்ஸ் ஷேடோ', அதிகாரப்பூர்வ மிட் - ஃபெஸ்ட் திரைப்படமாக மும்பை சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. ருடால்ஃப் ஹோஸின் 87 வயதான மகனான ஹான்ஸ் யூர்கன் ஹோஸை இப்படம் பின்தொடர்கிறது. அவர் முதல் முறையாக தனது தந்தையின் பின்னணி குறித்து அறிந்து கொள்கிறார். அவரது தந்தை ஆஷ்விட்ஸின் முகாம் தளபதியாக இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்களைக் கொன்றதற்கு காரணமாக இருந்தவராவார்.

தயாரிப்பாளர் சாஜன் ராஜ் குருப் இந்தச்  செய்தியாளர் சந்திப்பில்  பேசுகையில், ஆவணப்படங்கள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். தற்போது ஆவணப் படங்களுக்கு ஆஸ்கர் போன்ற விருதுகளும் வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட டாக் பஜார் எனப்படும் உரையாடல் களம் பற்றி குறிப்பிட்ட இயக்குநர் டேனியலா வோல்கர், படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இதுபோன்ற தளங்கள் வழிவகுப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
                                      ***

(Release ID: 2026308)
AD/PLM/KPG/RR


(Release ID: 2026470) Visitor Counter : 56