தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

எம்.ஐ,எஃப்.எஃப் 2024: வாழ்க்கை வரலாற்று ஆவணப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் குறித்து அறிவூட்டும் குழு விவாதம்

Posted On: 18 JUN 2024 7:29PM by PIB Chennai

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படங்களுக்கும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கும் இடையிலான நுணுக்கமான அம்சம் குறித்து சிந்தனையைத் தூண்டும் குழு விவாதம் நடைபெற்றது. திரைப்படத் துறையில் இந்த இரண்டு வகைகளின் நுட்பமான வேறுபாடுகள் மற்றும் இணக்கத்தை இந்த அமர்வு ஆராய்ந்தது.

மூத்த திரைப்பட இயக்குநரும் தொகுப்பாளருமான திரு ராகுல் ரவைல், திரைக்கதை எழுத்தாளர் திரு ராபின் பட், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் திரு பி.எஸ்.லிங்கதேவன் மற்றும் இயக்குநர்-தயாரிப்பாளர் திரு மிலிந்த் லேலே உள்ளிட்ட திரைப்படத் துறையின் புகழ்பெற்ற பிரமுகர்கள் தங்கள் ஆழ்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரும் 21 திரைப்பட புத்தகங்களின் ஆசிரியருமான திரு ஏ. சந்திரசேகர் இந்த அமர்வை நெறிப்படுத்தினார்.

வாழ்க்கை வரலாற்று ஆவணப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் இரண்டின் ஒருமைப்பாட்டையும் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த ஒருமித்த கருத்துடன் விவாதம் முடிவடைந்தது.

***

(Release ID: 2026286)

PKV/BR/RR



(Release ID: 2026438) Visitor Counter : 19