வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2024 மே மாதத்தில் 10.25% வளரும், 2024 ஏப்ரல்-மே மாதங்களில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 9.21% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Posted On: 14 JUN 2024 4:21PM by PIB Chennai

2024 மே மாதத்திற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 68.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, 2023 மே மாதத்துடன் உடன் ஒப்பிடும்போது இது 10.25 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. 2024 மே மாதத்திற்கான மொத்த இறக்குமதிகள் (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 79.20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, 2023 மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 7.95 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

2024 ஏப்ரல்- மே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 133.61 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 9.21 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. 2024 ஏப்ரல்- மே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 149.92 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 9.93 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

2023 மே மாதத்தில் பதிவான 34.95 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2024 மே மாதத்தில் வணிக ஏற்றுமதி 38.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வணிக இறக்குமதியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டின் 57.48 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிகமாக, இந்த ஆண்டு 61.91 பில்லியன் அமெரிக்க டாலர் பதிவானது.

2023 மே மாதத்தில் 26.27 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த  பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி, மே 2024 இல் 28.60 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள்) இறக்குமதி 2023 மே மாதத்தில் 36.31 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2024 மே மாதத்தில் 36.59 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2024 மே மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 30.16 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, இது 2023 மே மாதத்தில் 26.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2024 மே மாதத்திற்கான சேவைகள் இறக்குமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 17.28 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, இது 2023 மே மாதத்தில் 15.88 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது

***

AD/PKV/DL



(Release ID: 2025571) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Marathi , Hindi