சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதிய அரசு அமைந்த பின் முதல் 100 நாட்களில் சுகாதார இலக்குகளை அடைவது குறித்த உயர் நிலைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமை தாங்கினார்
Posted On:
14 JUN 2024 6:49PM by PIB Chennai
புதிய அரசு அமைந்த பின் முதல் 100 நாட்களில் சுகாதார இலக்குகளை அடைவது குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர் நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமை தாங்கினார். இந்தத் துறையின் இணையமைச்சர்களான திருமதி அனுப்பிரியா பட்டேலும், திரு ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த திரு நட்டா, தரமான, சுகாதார வசதிகளையும், சுகாதார அமைப்புகளையும் வழங்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். தொற்றா நோய்களின் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்த அவர், இளைஞர் இடையே புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிட்ட பிரச்சாரங்கள் தேவை என்று கூறினார். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று கூறிய அமைச்சர், தொற்றா நோய்கள் பற்றியும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாமான்ய மக்கள் புரிந்துகொள்ளும் எளிய முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வ சந்தரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
***
AD/SMB/RS/DL
(Release ID: 2025402)
Visitor Counter : 65