விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வேளாண்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
प्रविष्टि तिथि:
13 JUN 2024 5:25PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து மத்திய வேளாண் ஆராய்ச்சித் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் உயர் அதிகாரிகளுடன் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிகள் முக்கியமானவை என்றும் அவற்றை மதிப்பிட்டு மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கூறினார். இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதில் வெற்றி பெற்றால், ஒரு புதிய வேளாண் புரட்சியைக் கொண்டு வர முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 2047 ஆம் ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்து செயல்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அவர் கூறினார்.
விவசாயிகளின் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வலியுறுத்தினார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திரு ராம்நாத் தாக்கூர், திரு பகீரத் சவுத்ரி, வேளாண்துறை செயலாளர் திரு மனோஜ் அஹுஜா மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
***
SMB/PLM/AG/KV
(रिलीज़ आईडी: 2025258)
आगंतुक पटल : 115