பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்து ராஜ் துறையின் திட்ட அமலாக்கம் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
प्रविष्टि तिथि:
13 JUN 2024 6:52PM by PIB Chennai
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகள், முன்முயற்சிகள் மற்றும் திட்ட அமலாக்க உத்திகள் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமையில் புதுதில்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இத்துறையின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் உள்ளிட்டோர் அமைச்சகத்தின் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
அனைத்துத் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் அவற்றின் தற்போதைய நிலையை அமைச்சர்கள் ஆய்வு செய்ததுடன், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தனர்
மத்திய அரசின் முன்முயற்சிகள், ஊரகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதனை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை எட்டுவதற்கான இலக்குகளை அடைவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் வெற்றிகரமாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார். அனைத்துத் திட்டங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
***
SMB/PLM/AG/KV
(रिलीज़ आईडी: 2025257)
आगंतुक पटल : 115