பாதுகாப்பு அமைச்சகம்
தில்லியிலிருந்து கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவத் துணைத் தளபதி தொடங்கி வைத்தார்
Posted On:
13 JUN 2024 3:48PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இருந்து கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவத் துணைத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் ஓய் கே ஜோஷி, பணியில் உள்ள மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஒரு அதிகாரியும், 13 ஜெஏகே ரைஃபிள்ஸ் (கார்கில்) பிரிவின் 13 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுபேதார் மெகர்சிங் வீர்சக்ரா விருதுபெற்றவர் நயிப் சுபேதார் கேவல் குமார் சேனா பதக்கம் பெற்றவர். இந்த அணியில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கார்கில் போரில் தீவிராக ஈடுபட்டு, ஆபரேஷன் விஜய் தீரச் செயல் விருதுகளைப் பெற்றவர்கள்.
25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் வெற்றி பெற தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது இந்தப் பயணத்தின் நோக்கமாகும். சவால் மிக்க பகுதிகள் வழியாக சுமார் 1029 கிலோ மீட்டர் பயணம் செய்து மோட்டார் சைக்கிள் வீரர்கள் திராஸ் பகுதியைச் சென்றடைவார்கள். இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வீரச் செயல் விருது பெற்ற 100-க்கும் அதிகமான வீரர்களையும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களையும் போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் மனைவியரையும் சந்திப்பார்கள்.
இந்த மோட்டார் சைக்கிள் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு 2024 ஜூன் 20 அன்று சென்றடையும். 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய ராணுவம், பாய்ன்ட் 5140-ஐ கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025024
***
AD/SMB/RS/RR
(Release ID: 2025043)
Visitor Counter : 84