குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரை மொரீஷியஸ் பிரதமர் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
10 JUN 2024 6:43PM by PIB Chennai
மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்நாத் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு விருந்தினராக மொரீஷியஸுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறைப் பயணத்தையும், மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் மக்களுடன் தான் நடத்திய கலந்துரையாடல்களையும் அதிபர் திரௌபதி முர்மு அன்புடன் நினைவு கூர்ந்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மொரீஷியஸ் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டாளி என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
***
PKV/RS/DL
(रिलीज़ आईडी: 2023816)
आगंतुक पटल : 80