சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இந்தியாவில் மின்னணு முறையில் சுங்க வசூல் அமலாக்கத்திற்கு உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Posted On: 07 JUN 2024 7:38PM by PIB Chennai

இந்தியாவில் தற்போதுள்ள ஃபாஸ்ட் டேக் முறையுடன் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு புதுமையான மற்றும் தகுதி உள்ள நிறுவனங்களிடமிருந்து உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்வமுள்ள நிறுவனங்கள், tender@ihmcl.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் 2024 ஜூலை 22 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தங்களின் ஆர்வத்தைத் தெரிவிக்கலாம்.

ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்துவது தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரின்  சுமூகமான, தடையற்ற பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023504

***

AD/SMB/KPG/DL



(Release ID: 2023532) Visitor Counter : 46