நிதி அமைச்சகம்

இந்தியாவும், கத்தாரும் முதலீடு குறித்த கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தை புதுதில்லியில் இன்று நடத்தின

Posted On: 06 JUN 2024 7:07PM by PIB Chennai

இந்தியா - கத்தார் இடையேயான முதலீடு குறித்த கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் திரு அஜய் சேத் மற்றும் கத்தார் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பின் ஹாசன் அல் மல்கி ஆகியோர் கூட்டு பணிக்குழுவுக்கு இணைத் தலைமை வகித்தனர்.

பரஸ்பர வளர்ச்சி, செழுமையை வளர்க்கும் உணர்வுடன், முதலீட்டுக்கான கூட்டுப் பணிக்குழு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு வரையிலான பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான கூட்டுத் திறனை மேம்படுத்தவும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் கத்தார் இடையேயான வலுவான பொருளாதார உறவின் முக்கியத்துவத்தை கூட்டுத் தொழில்நுட்பப் பணிக்குழு சுட்டிக்காட்டியது. இது பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகள், பொதுவான நோக்கங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பகிரப்பட்ட தொலைநோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றி உள்ளது.

****

 

AD/IR/KPG/DL



(Release ID: 2023301) Visitor Counter : 37