வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தோ – பசிபிக் வளமையான பொருளாதார கட்டமைப்புக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது
Posted On:
06 JUN 2024 4:55PM by PIB Chennai
சிங்கப்பூரில் 2024, ஜூன் 6 அன்று நடைபெற்ற இந்தோ – பசிபிக் வளமையான பொருளாதார கட்டமைப்புக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பர்துவால் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
இந்திய பசிபிக் பொருளாதார கட்டமைப்பு அமைச்சர்கள் நிலயைிலான அறிக்கையை 2023 நவம்பர் 14 அன்று வெளியிட்டது. தூய்மைப் பொருளாதாரம், நியாயமான பொருளாதாரம் மற்றும் செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மேலான ஒப்பந்தம் ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தைகளின் மேம்பட்ட முடிவை அறிவித்தது. அதற்கேற்ப, இந்தோ – பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கூட்டாளர்கள் இந்த ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு ஒப்புதல் செயல்முறைகளுக்கான உரையின் சட்டப்பூர்வ மதிப்பாய்வை நிறைவு செய்தனர்.
இந்த ஒப்பந்தங்களில் இன்று இந்தோ – பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023211
***
AD/IR/KPG/DL
(Release ID: 2023279)
Visitor Counter : 77