நிதி அமைச்சகம்
ஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் இன்று தொடங்கியது
प्रविष्टि तिथि:
05 JUN 2024 5:52PM by PIB Chennai
ஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் இன்று (05.06.2024) தொடங்கியது. பொது நிதி நிர்வாக முறை (பிஎஃப்எம்எஸ்) மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தும் இந்த நடைமுறை காகிதம் இல்லாத சுங்கம் மற்றும் வர்த்தக வசதியின் மற்றொரு முன்முயற்சியாகும்.
இந்தப் புதிய நடைமுறை மனிதர்கள் தலையீட்டை அகற்றி வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் வணிகத்தை எளிதாக்கும் நடைமுறையின் மேம்பாட்டு முயற்சிகளை மத்திய நேர்முக வரிகள் வாரியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. வர்த்தக வசதி ஒப்பந்தத்தின் கூடுதல் அணுகுமுறைகளை பின்பற்றி புதிய வர்த்தக வசதிகளை மேற்கொள்வதை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2022933)
आगंतुक पटल : 147