நிலக்கரி அமைச்சகம்
சுரங்கங்களை பசுமையாக்குதல்: நிலக்கரி, லிக்னைட் பொதுத்துறை நிறுவனங்கள் நில சீரமைப்பு மற்றும் நீடித்தத் தன்மைக்கு வழிவகுக்கின்றன
प्रविष्टि तिथि:
04 JUN 2024 1:56PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் நிலக்கரி மற்றும் லிக்னைட் பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டிற்கான நிலக்கரி உற்பத்தி அளவை மட்டும் அதிகரிக்காமல் பல்வேறு வழிமுறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுகிறது.
சுரங்க நிலங்களை மறுசீரமைக்க நிலக்கரி மற்றும் லிக்னைட் துறைகளின் முயற்சிகள் குறித்த அறிக்கையை நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த பொதுத்துறை நிறுவனங்கள் விரிவான அளவில் வனப்பரப்பை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்புத் திட்டங்கள், தரிசு நிலங்களை செழிப்பான பசுமைமிக்க பகுதிகளாக மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
இத்தகைய முன்முயற்சிகள் நிலம் பாலைவனமாவதற்கு எதிராக, வறட்சியை எதிர்கொள்ளும் தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கார்பன் வரிசைப்படுத்தல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கும் பங்களிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022724
----
(Release ID: 2022724)
AD/IR/KPG/RR
(रिलीज़ आईडी: 2022735)
आगंतुक पटल : 151