நிதி அமைச்சகம்
2023-2024 நிதியாண்டிற்கான இந்திய அரசின் (தற்காலிக/தணிக்கை செய்யப்படாத) கணக்குகள்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2024 6:33PM by PIB Chennai
2023-2024 நிதியாண்டிற்கான மத்திய அரசின் (தற்காலிக/தணிக்கை செய்யப்படாத) கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
2022-23-ம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 27,88,872 கோடி வருவாய் பெற்றுள்ளது. இதில் ரூ. 23,26,524 கோடி வரி வருவாய், ரூ. 4,01,888 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ. 60,460 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் அடங்கும். இதில் கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் கடன்களின் மீட்பு மூலம் ரூ. 27,338 கோடியும், இதர மூலதன ரசீதுகள் மூலம் ரூ. 33,122 கோடியும் அடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் மத்திய அரசால் வரிப் பகிர்வாக மாநில அரசுகளுக்கு ரூ. 11,29,494 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 1,81,088 கோடி அதிகமாகும்.
மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்தச் செலவு ரூ. 44,42,542 கோடி ஆகும். இதில் ரூ.34,94,036 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 9,48,506 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ. 10,63,871 கோடி வட்டி செலுத்துதலாகவும், ரூ. 4,13,542 கோடி பெரிய மானியங்கள் வழங்குவதாகவும் உள்ளது.
***
ANU/ PKV/BR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2022424)
வருகையாளர் எண்ணிக்கை : 224