சுரங்கங்கள் அமைச்சகம்

2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி நிலைகளுக்குப் பிறகு ஏப்ரல் 2024 இல் சுரங்கத் துறையில் வளர்ச்சி

Posted On: 31 MAY 2024 6:45PM by PIB Chennai


இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை சேர்ந்து எம்.சி.டி.ஆர் கனிம உற்பத்தியில் மொத்தம் சுமார் 80% பங்களிக்கின்றன. இந்த முக்கிய கனிமங்கள் நிதியாண்டு 2023-24 இல் சாதனை உற்பத்தி நிலைகளை வெளிப்படுத்தின. இரும்புத் தாது உற்பத்தி 277 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், சுண்ணாம்புக் கல் உற்பத்தி 450 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் இருந்தன.
கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டின் முதல் மாதத்தில் இந்த தாதுக்களின் உற்பத்தியில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 இல் 25 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி, ஏப்ரல் 2024 இல் 26 மில்லியன் மெட்ரிக் டன்னாக 4% வளர்ச்சியுடன் அதிகரித்துள்ளது. சுண்ணாம்புக்கல் உற்பத்தி, கடந்த ஆண்டின் 38.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து ஏப்ரல் 2024 இல் 39.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக 2.1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
 இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2023-24 நிதியாண்டில் முதன்மை அலுமினிய உலோகத்தின் உற்பத்தி 41.6 லட்சம் டன் என்ற சாதனை அளவை எட்டியது. நடப்பு நிதியாண்டில், அலுமினிய உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. ஏப்ரல் 2024 இல் 3.42 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினியம், கடந்த ஆண்டின் 3.39 லட்சம் டன் உற்பத்தியை விட 1% அதிகமாகும் .
இந்தியா, உலகின் 2-வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், 3-வது பெரிய சுண்ணாம்புக்கல் உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வளர்ச்சி, எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்களின் வலுவான தேவை நிலைமைகளை பிரதிபலிக்கிறது. அலுமினியத்தின் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற துறைகளில் தொடர்ச்சியான வலுவான பொருளாதார நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.

***

ANU/ PKV/BR/KV



(Release ID: 2022422) Visitor Counter : 53


Read this release in: Malayalam , English , Urdu , Hindi