ஆயுஷ்
azadi ka amrit mahotsav

2024 சர்வதேச யோகா தினத்திற்கான 25வது கவுண்ட் டவுனின் ஒரு பகுதியாக புத்த கயாவில் 7,000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் யோகா பயிற்சி செய்தனர்

प्रविष्टि तिथि: 27 MAY 2024 6:08PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்துக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில், பீகாரின் புத்த கயாவில் பெரிய அளவிலான யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

27 மே 2024 அன்று அதிகாலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் தொடங்கிய இந்த நிகழ்வில், 7000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர்.  கூட்டு யோகப் பயிற்சி தனி நபருக்கு மட்டுமின்றி, சமூக நலனுக்கும் சிறந்தது என்பதை நிரூபிப்பதாக இது அமைந்தது.

சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் பொதுவான யோகா நெறிமுறையின்படி,  பிரார்த்தனை, யோக சூக்சமதா, தடாசனம், வக்ராசனம், பாத ஹஸ்தாசனம், அர்த்த சக்ரசனம், திரிகானசனம், பத்ராசனம் போன்ற பல்வேறு ஆசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ், அங்கு கூடியிருந்தவர்கள் இந்த ஆசனங்களை மிகுந்த உற்சாகத்துடன் செய்தனர்.

************

ANU/KR

Release ID: 2021835


(रिलीज़ आईडी: 2021936) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali