மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளப் பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் 44 வது பயிற்சிக் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 27 MAY 2024 6:56PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) இணையதளப் பாதுகாப்பு' முன்முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து அரசுத் துறைகளிலும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் (CISOs) திறன்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய மின்-ஆளுமை பிரிவு (NeGD), அதன் திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ், ஆந்திரா, அசாம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் மற்றும் புது தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் 44வது  பயிற்சித் திட்டத்தை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் தகவல் தொழில் நுட்ப அமைச்சம் மற்றும் தேசிய மின்-ஆளுமை பிரிவு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிஐஎஸ்ஓ பயிற்சி, பொது தனியார் ஒத்துழைப்பின் (பிபிபி) கீழ் நடத்தப்படுகிறது. ஜூன் 2018 முதல் மே 2024 வரை, 1,637 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

************

ANU/PLM/KV/KR

(Release ID: 2021851)


(Release ID: 2021918) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi