பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக்காலத்தை 2025 மே 31 வரை ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 27 MAY 2024 10:00PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, மே 27, 2024 அன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத்தின் பணிக்காலத்தை அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31, 2024) ஒரு வருட காலத்திற்கு அதாவது மே 31, 2025 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.

அவர் ஆகஸ்ட் 25, 2022 அன்று இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ..டி காரக்பூர் மற்றும் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான டாக்டர் காமத், 1989 இல் டிஆர்டிஓவில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளில் திறம்பட அவர் பணியாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

************

ANU/PLM/KV/KR


(रिलीज़ आईडी: 2021898) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी