ஆயுஷ்
azadi ka amrit mahotsav

காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்கான ஆலோசனை நிகழ்வை ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து நடத்தியது

प्रविष्टि तिथि: 27 MAY 2024 6:53PM by PIB Chennai

அனைத்துத் தரப்பினருக்கும் ஆயுஷ் சிகிச்சைகள் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்காக ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் ஆயுஷ் சிகிச்சைகளை சேர்ப்பதற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.  

கூட்டத்தில் உரையாற்றிய ஆயுஷ் வைத்ய அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் கோடேச்சா, அனைவருக்கும் ஆயுஷ் சிகிச்சைகள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதே ஆயுஷ் அமைச்சகத்தின் நோக்கம் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் ஆயுஷ் மருந்து தயாரிப்புகளின் உற்பத்தி எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (ஏஐஐஏ) இயக்குனர் பேராசிரியர் தனுஜா நெசாரி கூறுகையில், ஆயுஷ் சிகிச்சைகளை பிரதான சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என்றார்.  காப்பீட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இந்தக் கூட்டம் ஒரு முக்கிய படியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

************

ANU/PLM/KV/KR


(रिलीज़ आईडी: 2021897) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi