குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நேஷனல் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (என்ஏஎல்) தொழிற்சாலையைப் பார்வையிட்ட பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்
Posted On:
27 MAY 2024 7:17PM by PIB Chennai
வணக்கம், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தியா நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் பூமியாக உள்ளது. நமது எதிர்காலக் கண்ணோட்டம் வலுவாகி வருவதை நான் காண்கிறேன்.
அமிர்த காலத்தில், இந்தியாவின் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்த முன்னேற்றம் அதிகரித்து வருகிறது. நாம் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இருக்கப் போகிறோம்.
புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இயந்திர கற்றல், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, போன்றவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது.
பொதுவான பார்வையில், இந்த தொழில்நுட்பங்கள் ஒரு சவாலாக உள்ளன. ஆனால் உங்களைப் பொறுத்தவரை, இந்த சவால் ஒரு வாய்ப்பு. நமது இளைஞர்களின், வாய்ப்புகளை நீங்கள் அதிகரித்து வருகிறீர்கள்.
நண்பர்களே,
இந்த நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மையமாக வளர்ந்து, விண்வெளித் துறையிலும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளி சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே ஒரு நிறுவனத்தின் செயல் அல்ல. பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்புதான் இதற்கு பங்களித்துள்ளது என்பதை நான் இப்போது உணர்கிறேன்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் ஒரு நாடு பாதுகாப்பான எல்லைகளைக் கொண்டிருக்கும். நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது, ஏனென்றால் உலகில் ஈடு இணையற்ற அறிவாற்றலுடன், கல்வியுடன் நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.
மேம்பட்ட விமான தொழில்நுட்பத்தை வடிவமைத்து உருவாக்குவதற்கான இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் உள்நாட்டு விமானம் உண்மையிலேயே தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக நிற்கிறது.
நண்பர்களே,
நமது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047 ஆம் ஆண்டில் நாம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்த நாட்டின் எழுச்சி தடுக்க முடியாதது. முன்னேற்றம் அதிகரித்து வருகிறது.
நன்றி.
************
ANU/PLM/KV/KR
(Release ID: 2021893)