குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர், மே 27 அன்று கர்நாடக மாநிலம் பெலகாவி மற்றும் பெங்களூரு செல்கிறார்
प्रविष्टि तिथि:
25 MAY 2024 6:22PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சுதேஷ் தங்கர் ஆகியோர் 2024 மே 27 அன்று கர்நாடகாவில் உள்ள பெலகாவி மற்றும் பெங்களூருவுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
தமது பயணத்தின்போது பெலகாவியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவன நாள் மற்றும் பெலகாவியில் கேஎல்இ பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.
அதன்பிறகு, திரு ஜக்தீப் தன்கர் இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் தேசிய விமான ஆய்வகத்தின் (சிஎஸ்ஐஆர்-என்ஏஎல்) பேலூர் வளாகத்திற்குச் சென்று இலகு ரக போர் விமானத்தின் (எல்சிஏ) அம்சங்கள் மற்றும் சரஸ் கண்காட்சியைப் பார்வையிடவுள்ளார்.
என்ஏஎல்-ல் சில திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தமது பயணத்தின் போது, பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் குடியரசுத் துணைத் தலைவர் செல்ல உள்ளார்.
***
ANU/AD/PLM/KV
(रिलीज़ आईडी: 2021630)
आगंतुक पटल : 105