பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான், பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையின் பயிற்சிக் கட்டளைத் தலைமையகத்தைப் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
24 MAY 2024 6:44PM by PIB Chennai
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் 2024 மே 24 அன்று கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் (IAF) பயிற்சிக் கட்டளையைப் பார்வையிட்டார். பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல் போன்றவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
பயிற்சிகளை நடத்துவதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அனைத்து பணியாளர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். கூட்டு முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாட்டின் வலிமையை வலுப்படுத்தும் வகையில் தொழில்முறை சிறப்புத் தன்மையை தொடர்ந்து மேம்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளையும் திரு அனில் சௌகான் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பயிற்சிக் கட்டளை தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் திரு அனில் சௌகானை வரவேற்றார்.
***
ANU/AD/PLM/KV
(रिलीज़ आईडी: 2021590)
आगंतुक पटल : 106