குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டுக் குடியரசு துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Posted On: 22 MAY 2024 5:43PM by PIB Chennai

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

பகவான் கௌதம புத்தரின் போதனைகள் நெறிமுறை நடத்தை, மன ஒழுக்கம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றிய வாழ்க்கையைத் தொடர்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையை வழங்குகின்றன.

நான்கு உன்னத உண்மைகள் மற்றும் எட்டு வழிமுறைகள் பற்றிய அவரது கோட்பாடுகள் இரக்கம் மற்றும் அகிம்சையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. மிகவும் இரக்கம் உள்ள மற்றும் இணக்கமான உலகத்திற்காக தனிப்பட்ட மற்றும் கூட்டான மன உணர்வு மற்றும் அமைதியை பராமரிப்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

இந்தப் புனித நாளில், பகவான் புத்தரின் மாண்புகளைத் தழுவி, அவற்றை நமது எண்ணங்களிலும், செயல்களிலும் இணைத்து, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக நாம் உறுதியேற்போம்.

----

 

SMB/KPG/DL



(Release ID: 2021350) Visitor Counter : 22