நிதி அமைச்சகம்
சமையல் எண்ணெய், பித்தளை கழிவு, பாக்கு, தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான கட்டண மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பான அறிவிப்பு
Posted On:
16 MAY 2024 6:33PM by PIB Chennai
2001 ஆகஸ்ட் 3 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை அறிவிக்கை எண் 36/2001- சுங்கம் (என்.டி)யில் கீழ்கண்ட திருத்தம் செய்யப்படுகிறது. சுங்கச் சட்டம், 1962 (1962-ன் 52) பிரிவு 14-ன் துணைப் பிரிவு (2)-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இதைச் செய்வது அவசியமானதாகும்.
கச்சா பாமாயில் விலை ஒரு டன்னுக்கு 892 அமெரிக்க டாலராகவும், ஆர்பிடி பாமாயில் 907 அமெரிக்க டாலாராகவும், மற்ற பாமாயில் 900 அமெரிக்க டாலாராகவும், கச்சா பாமலின் விலை 919 அமெரிக்க டாலாராகவும், ஆர்பிடி பாமலின் விலை 922 அமெரிக்க டாலாராகவும், மற்ற பாமலின் விலை 921 அமெரிக்க டாலாராகவும் இருக்கும்.
கச்சா, சோயாபீன் எண்ணெய் விலை ஒரு டன்னுக்கு 935 அமெரிக்க டாலராகவும், பித்தளைக் கழிவு ஒரு டன் விலை 5,587 அமெரிக்க டாலராகவும் இருக்கும்.
இந்த அறிவிப்பு 2024 மே 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020819
***
AD/SMB/KPG/RR
(Release ID: 2020819)
(Release ID: 2020894)
Visitor Counter : 96