வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகம் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி 2023, ஏப்ரல் மாதத்தில் 60.40 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 64.56 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்ட 6.88% வலுவான வளர்ச்சியுடன் தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2024 4:02PM by PIB Chennai

2024 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள்) 64.56 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.88 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 ஏப்ரல் மாதத்தில் மொத்த இறக்குமதிகள் (வணிக மற்றும் சேவைகள்) 71.07 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023, ஏப்ரல் மாதத்தைவிட 12.78 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது.

வணிக வர்த்தகம்

2023 ஏப்ரல் மாதத்தில் 34.62 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில், 2024 ஏப்ரல் மாதத்தில் வணிக ஏற்றுமதி 34.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இறக்குமதியைப் பொறுத்தவரை 2023 ஏப்ரல்  மாதத்தில் 49.06 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2024, ஏப்ரல் மாதத்தில் 54.09 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2024 ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலியம் அல்லாத, ரத்தினங்கள், நகை அல்லாத 26.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது  2023 ஏப்ரல் மாதத்தில் 25.77 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020659

---- 

(Release ID: 2020659)

ANU/AD/IR/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2020666) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी