பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது

Posted On: 10 MAY 2024 5:02PM by PIB Chennai

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் (ஜிஆர்எஸ்இ) நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது.

இந்த விழாவிற்கு போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் பி. சிவகுமார் தலைமை தாங்கினார், ஜிஆர்எஸ்இ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இந்திய கடற்படையின் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் ஜிஆர்எஸ்இ அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நீர்மூழ்கி கப்பலை தாக்கும் திறன் கொண்ட கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்திற்கு இடையே முடிவடைந்தது. இந்தத் திட்டத்தின் ஆறு கப்பல்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் கப்பலை (அர்னாலா) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அர்னாலா வகை கப்பல் இந்திய கடற்படையின் பணியில் உள்ள அபய் வகுப்பு கார்வெட் வகை கப்பல்களுக்கு மாற்றாக இருக்கும். கடலோரத்தில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடி பதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கடைசி கப்பலான யார்டு
3034-ன் கட்டும் பணி, உள்நாட்டு கப்பல் கட்டும் நோக்கில் இந்திய கடற்படையின் முயற்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும், மேலும் இது தேசத்தின் தற்சார்பு இந்தியா' மற்றும் 'மேக் இன் இந்தியா' முயற்சிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

 

***

PKV/RR/DL


(Release ID: 2020249) Visitor Counter : 93


Read this release in: Hindi , English , Urdu , Bengali