புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

"ஐஆர்இடிஏ தனது துணை நிறுவனத்தை குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் நிறுவியுள்ளது

Posted On: 09 MAY 2024 5:37PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ) குஜராத்தின் கிப்ட் சிட்டியில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவை மையத்தில் (ஐஎஃப்எஸ்சி) தனது துணை நிறுவனத்தை இணைத்துள்ளது. "ஐஆர்இடிஏ குளோபல் கிரீன் எனர்ஜி ஃபைனான்ஸ் ஐஎஃப்எஸ்சி லிமிடெட்" என்று பெயரிடப்பட்ட இந்தத் துணை நிறுவனம், 2024, மே 7 அன்று அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. முன்னதாக, 2024, பிப்ரவரி 8-ம் தேதி, ஐஎஃப்எஸ்சி கிஃப்ட் சிட்டியில் நிதி நிறுவனத்தை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி தனது தடையில்லா கடிதத்தை வழங்கியது.

இந்த வளர்ச்சிக் குறித்து கருத்து தெரிவித்த ஐஆர்இடிஏ-வின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், கிப்ட் சிட்டியில், ஐஆர்இடிஏ இருப்பது பசுமை நிதியுதவியில் புதுமையான அணுகுமுறைகளை முன்னோடியாகக் கொண்டுவரும் அதன் பணியில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது என்றார். "இந்தத் துணை நிறுவனம் ஐஆர்இடிஏ-வை அதன் உலகளாவிய வரம்பை விரிவுபடுத்துவதற்கு நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், இந்திய அரசின் 5 லட்சிய இலக்குகளுடன் இணைந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை இயக்குவதற்கான போட்டி நிதியைப் பெறுவதற்கான ஒரு வெளிநாட்டு தளமாகவும் செயல்படுகிறது" என்றார்.

ஐஎஃப்எஸ்சி-யில், ஐஆர்இடிஏ-வின் நுழைவு புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்கும் என்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அதன் உலகளாவிய தடத்தை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் கூறினார். இந்த உத்திபூர்வ நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் மூலம் நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கான ஐஆர்இடிஏ-வின் பார்வைக்கு ஏற்ப உள்ளது. ஐஎஃப்எஸ்சி-யில் ஐஆர்இடிஏ இணைந்திருப்பது, புதிய நிதி மாற்றுகளுக்கான அதிக அணுகல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன் மேம்பட்ட ஒத்துழைப்பை அளிக்கும் என  நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

***

PKV/KPG/DL



(Release ID: 2020109) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi