மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய புலனாய்வு பிரிவின் துறைசார் எழுத்துப்பூர்வ போட்டித் தேர்வு, 2023க்கான முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 03 MAY 2024 7:31PM by PIB Chennai

16.03.2024 & 17.03.2024 அன்று மத்திய பணியாளர் தேர்வாணையம்  (யுபிஎஸ்சி) நடத்திய சிபிஐ (டிஎஸ்பி)  துறை போட்டித் தேர்வு, 2023 இன் எழுத்துப் பகுதியின் முடிவுகளின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வுக்கு (பிஎஸ்டி) தற்காலிகமாக தகுதி பெற்றுள்ளனர்.

சிபிஐ நடத்த வேண்டிய பிஎஸ்டி தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து சிபிஐ தகுதியானவர்களுக்கு தெரிவிக்கும். இந்தப் பட்டியலில் உள்ள எந்தவொரு நபரும், பிஎஸ்டி குறித்து எந்த தகவலையும் பெறவில்லை என்றால், அவர்கள் உடனடியாக சிபிஐ அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு தொடர்பான மதிப்பெண்கள் மற்றும் பிற விவரங்கள் இறுதி முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதாவது நேர்காணல் நடத்தப்பட்ட பிறகு ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும் மற்றும் யுபிஎஸ்சியின் இணையதளத்தில் 30 நாட்களுக்கு கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், CBI HO, 5B, C.G.O வளாகம், லோதி சாலை, புது தில்லி - 110003 என்ற முகவரியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வானவர்கள் பட்டியலுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019583

*****

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 2019629) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati