அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) "ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்: இரண்டும் ஒன்றாக இணைந்தவை" என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது
Posted On:
02 MAY 2024 5:39PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) "ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்: இரண்டும் ஒன்றாக இணைந்தவை" என்ற தலைப்பில் மூத்த இதயநோய் நிபுணரும், தேசிய இதயவியல் கழகக் கல்வியாளர்கள் தலைவருமான பேராசிரியர் ஸ்ரீதர் துவிவேதி இன்று தூய்மை இருவார விழா நிகழ்ச்சியின் போது உரையாற்றினார்.
நிறுவனத்தின் விவேகானந்தர் மண்டபத்தில் சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் ஏற்பாடு செய்திருந்த தூய்மை இருவார விழா நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் இந்த விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
பேராசிரியர் ஸ்ரீதர் துவிவேதி தனது உரையில், உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் தூய்மையை ஊக்குவிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், கொவிட் -19 தொற்றுநோயின் போது பின்பற்றப்பட்ட ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடருமாறு பார்வையாளர்களை வலியுறுத்தினார். பேராசிரியர் துவிவேதியின் செய்தி, சரியான சுகாதார நடைமுறைகள் மற்றும் சீரான வாழ்க்கை முறையை உள்ளடக்கிய ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டியது.
சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், தூய்மையான தேசம் என்ற இந்தியாவின் தோற்றத்தை சரிசெய்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தூய்மையை ஒரு இயக்கமாக மாற்றுவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கும், தூய்மை இருவார விழா முன்முயற்சி இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
****
AD/SMB/RS/DL
(Release ID: 2019490)
Visitor Counter : 59