தேர்தல் ஆணையம்
அனந்த்நாக் - ரஜௌரி தொகுதிக்கான தேர்தல் தேதியை மே 7-ம் தேதியிலிருந்து 25-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது
Posted On:
30 APR 2024 8:35PM by PIB Chennai
இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மார்ச் 16 தேதியிட்ட தனது செய்திக்குறிப்பின் மூலம் மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்தது. அதன்படி, மூன்றாம் கட்டத்திற்கான அறிவிக்கை 2024 ஏப்ரல் 12-ம் தேதியும், தேர்தல் நாள் 2024 மே 07 ஆம் தேதியும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜௌரி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து (பி.சி) தேர்தல் தேதியை மாற்றுவதற்கு பல்வேறு பிரதிநிதித்துவங்கள் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. ஏனெனில் பல்வேறு தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் இணைப்பின் இயற்கையான தடைகள் பிரச்சாரத்திற்கு இடையூறாக மாறுகின்றன. இது அந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் இல்லாததற்கு சமம் என்பதால் இது தேர்தல் நடைமுறையை பாதிக்கும்.
யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அறிக்கையை பரிசீலித்த பின்னர், அந்த தொகுதியில் நிலவும் கள நிலைமையை பகுப்பாய்வு செய்த பின்னர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 56 -ன் கீழ், மக்களவைக்கான பொதுத் தேர்தல், 2024 தொடர்பாக மேற்கூறிய நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் தேதியை பின்வருமாறு திருத்த ஆணையம் முடிவு செய்துள்ளது: -
அதன் படி இந்த தொகுதியில் மே 07-ம் தேதிக்கு பதிலாக 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2019255)
PKV/RS/RR
(Release ID: 2019300)